143
அதிராம்பட்டினம் மரைக்கா குளம் மேடு மப்ரூக் பள்ளி அருகில் நேற்று 15.02.2019 வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஒரு மணியளவில் அப்பகுதியில் உள்ள ஒருவரின் இருசக்கர வாகனம் மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்தது. வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த ஹோண்டா மாடல் இருசக்கர வாகனம் மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்துள்ளது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாகனம் தானாக பற்றி எரிந்ததா, அல்லது யாரேனும் சமூக விரோத விஷமிகள் எரித்தனரா என தெரியவில்லை.
எனவே அதிரை மக்கள் தங்கள் வாகனங்களை கவனமாக பாதுகாத்துக்கொள்ள வேண்டும். வாகங்களை வீட்டு வாசலில் நிறுத்துவோர் கவனுத்தடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை செய்யப்படுகிறார்கள்.