தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் ஃபுட்பால் கிளப்(WFC) சார்பாக 14 வயதிற்குட்பட்டோருக்கான(U-14) கால்பந்து தொடர்போட்டி கடந்த 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பெரிய ஜுமுஆ பள்ளி பின்புறம் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.
இதில் அதிரையை சேர்ந்த பல அணிகள் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இத்தொடரின் இறுதி ஆட்டத்தில் TDFC அணியினரும் WFC அணியினரும் மோதினர். இதில் சிறப்பாக விளையாடிய TDFC அணி, WFC அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற TDFC அணிக்கு முதல் பரிசாக ரூ.1,500 மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த WFC அணிக்கு ரூ.1,000 மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது. மேலும் இத்தொடரில் கலந்துகொண்டு வெற்றியை நழுவவிட்ட அனைத்து அணிகளுக்கும் பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.