தஞ்சைமாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ளது மகிழங்கோட்டை கிராமம்.
இந்த பகுதியில் புள்ளிமான் ஒன்று இறந்த நிலையில் கிடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த ஜோதி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரனை மேற்கொண்டார்.
பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த வன சரக அதிகாரி, காவல் துரையினர் ஆகியோர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை காட்டில் இருந்து இந்த புள்ளிமான் தப்பி வந்ததா அல்லது யாரேனும் வேட்டையாடிவிட்டு அதிரையில் வீசி சென்றனரா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.