139
தஞ்சாவூர் லோக்சபா தொகுதி த.மா.கா., வேட்பாளர் நடராஜனுக்கு ஓட்டு கேட்டு முதல்வர் பழனிசாமி ஒரத்தநாட்டில் நேற்று இரவு 9:00 மணிக்கு பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பிரசார வேனுக்கு பின்புறம் இருந்து மர்ம நபர் செருப்பை வீசினார். செருப்பு வேனின் பின் பகுதியில் விழுந்தது. பிரசாரம் முடியும் வரை செருப்பை யாரும் எடுத்து கீழே போடவில்லை. செருப்பு வீசியது யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.