Home » 220 வாக்காளர் அட்டைகள் தி.மு.க.,வினரிடம் பறிமுதல்!!

220 வாக்காளர் அட்டைகள் தி.மு.க.,வினரிடம் பறிமுதல்!!

0 comment

சென்னை, ஆதம்பாக்கம், மேடவாக்கம் மெயின் ரோட்டில்,ஆலந்துார் சட்டசபை தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி, பாலசுப்பிரமணியம் தலைமையில், அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு, வாகனசோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, தி.மு.க., கொடியுடன் வேகமாக வந்த காரை, பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அதில், கட்டு கட்டாக, தென்சென்னை லோக்சபா தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களின், வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்தன.

அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது தொடர்பாக விசாரித்தபோது, காரில் வந்தவர்கள், முன்னுக்கு பின்முரணாக பதிலளித்தனர்.இது குறித்து,பறக்கும் படையினர், உயர் அதிகாரிகளுக்கு தகவல்தெரிவித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட, 220 வாக்காளர் அடையாள அட்டைகள், காரில் அவற்றை கொண்டு வந்த உள்ளகரம், 168வது வார்டு, தி.மு.க., வட்ட செயலர், திவாகர், 37,மற்றும் ஆறு தி.மு.க., பிரமுகர்கள், ஆதம்பாக்கம்காவல் நிலையத்தில்ஒப்படைக்கப்பட்டனர்.அவர்கள் மீது, வாக்காளர்களை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்டமூன்று பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்கு பதிந்து, ஏழு பேரிடமும் தொடர்ந்து விசாரிக்கின்றனர்..

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter