82
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் வார்டு 16 மற்றும் 17வது மேலத்தெரு பகுதியில் இன்று(10/04/2019) திராவிட முன்னேற்ற கழகத்தினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வீடு வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
திமுக தஞ்சை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமானிக்கம் அவர்களுக்கு வாக்களிமாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில், திமுக அதிரை பேரூர் தலைவர் இராம குணசேகரன் தலைமையில், முன்னாள் அதிரை சேர்மன் அஸ்லம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.