Home » அதிரை மாணவர் சங்கத்தினரை நேரில் சந்தித்து ஆதரவு கோரிய திமுகவினர்..!

அதிரை மாணவர் சங்கத்தினரை நேரில் சந்தித்து ஆதரவு கோரிய திமுகவினர்..!

0 comment

இந்திய அளவில் நாடாமன்ற தேர்தல் வாக்கு சேகரிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு வாக்கு சேகரிக்கும் பணியில் அக்கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தஞ்சை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமானிக்கம் அவர்களுக்கு வாக்களிக்கும் படி அதிராம்பட்டினம் மாணவர் சங்கத்தின் நிர்வாகிகளை நேற்று திமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர்.

ஆனால், மாணவர் சங்கத்தினர் திமுகவிற்கு ஆதரவு அளிப்பது குறித்து பின்னர் அறிவிப்பதாகவும்,மேலும் கல்லூரி மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு அம்ச கோரிக்கைகளையும் முன்வைப்பதகாவும் கூறினர்.

இந்நிகழ்வில், திமுக அதிரை நகர் செயலர் இராம.குணசேகரன், மாணவர் சங்க தலைவர் சாகுல் ஹமீத் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter