தமிழகம் முழுவதும் தேர்தல் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் சூடுபிடிதுள்ள நிலையில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமானிக்கம் அவர்களுக்கு அதிரை பேரூர் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று (13/04/2019) மாலை 11வது வார்டு முதம்மாள் தெரு பகுதியில் வீடுவீடாக அதிரை பேரூர் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வின் போது திமுக அதிரை பேரூர் தலைவர் இராம குணசேகரன் தலைமையில், பழஞ்சூர் செல்வம், அன்சர்கான், மரைக்கா இதிரிஸ், முதம்மாள் தெரு தில்லை நாதன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர்கள் உடனிருந்து திமுகவிற்கு ஆதரவு அளிக்குமாறு பொதுமக்களிடையே கேட்டுக்கொண்டனர்.
அதிரை திமுகவினர் 11வது வார்டில் வீடுவீடாக வாக்கு சேகரிப்பு..!!
94
previous post