நேற்று(15-04-2019) இரவு மதுக்கூர் அருகே மின்வாரியத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது..இதனால் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள், வணிகர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகிவுள்ளனர்…
இதனால் இன்றும்(16-04-2019) மின்சாரம் இல்லாமல் இரண்டாம் நாளும் இரவில் மூழ்கியுள்ளது. இதனிடையே அதிரை மின்சாரம் வாரியம் ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இன்று (16-04-2019) இரவு 12 மணியளவில் மின்சாரம் வழங்கவுள்ளதாகவும். அதனால் வீட்டில் பயன்படுத்துகின்ற ஏசி, குளிர் சாதன பெட்டி, டிவி போன்ற மின்சாதன பொருட்களை மின் இணைப்பிலிருந்து மின்சாரம் வரவுள்ளதால் துண்டித்து வைக்குமாறு அதிரை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.