Home » ஓட்டு எண்ணிக்கை மையத்தில் நுழைந்த அதிகாரி யார்?

ஓட்டு எண்ணிக்கை மையத்தில் நுழைந்த அதிகாரி யார்?

0 comment
மதுரை தொகுதி ஓட்டு எண்ணிக்கை மைய பாதுகாப்பு அறைக்குள் அனுமதியின்றி பெண் அதிகாரி ஒருவர் நுழைந்ததாக கம்யூ., வேட்பாளர் சு.வெங்கடேசன் புகார் கூறியதை தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் கடந்த 18 ம் தேதி லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற்றது. சித்திரை திருவிழாவைமுன்னிட்டு இரவு 8 மணி வரையில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. மே மாதம் 23ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஓட்டு பதிவான மின்னணு இயந்திரங்கள் ஓட்டு எண்ணப்படும் பகுதியான அரசு மருத்துவக்கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாதுகாப்பை மீறி பெண் அதிகாரி ஒருவர் அனுமதியின்றி நுழைந்ததாக புகார் கூறப்பட்டது. மேலும் அவர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அறைக்குள் இருந்ததாகவும் முக்கிய ஆவணங்களை சிலவற்றை எடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்த தகவல் அறிந்த பல்வேறு கட்சியினர் அரசு மருத்துவக்கல்லூரி முன்னர் கூடினர்.போலீசாரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அறையின் சிசிடிவி காட்சிகளை அரசியல் கட்சியனருக்கு காண்பிக்க வேண்டும் எனவும் மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட கலெக்டர் சம்பவ இடத்திற்கு வரவேண்டும் எனகோரிக்கை விடுத்து மா.கம்யூ., அமமுக கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால்அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter