கொழும்பு: இலங்கையில் அடுத்தடுத்து இரண்டு தேவாலயங்களில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அதேபோல் 4 ஹோட்டல்களிலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்து இருக்கிறது. இந்த குண்டுவெடிப்பில் பலர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.இன்று உலகம் முழுக்க ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இயேசு சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்தெழுந்ததை கொண்டாடும் வகையில் இன்று உலகம் முழுக்க ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.இந்த நிலையில் ஈஸ்டர் பண்டிகையை அடுத்து கிறிஸ்துவர்கள் நேற்று இரவு தேவாலயங்களில் சென்று வழிபட்டார்கள். அதேபோல் இன்று காலையும் ஞாயிற்றுக் கிழமை என்பதால் தேவாலயங்களில் சென்று வழிபாடு நடத்தினார்கள்.
இந்த நிலையில்தான் இன்று இலங்கையில் சர்ச்சில் மக்கள் வழிபாடு நடத்திக் கொண்டு இருக்கும் போது அங்கு வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்று உள்ளது. மொத்தம் இலங்கையில் 4 சர்ச் மற்றும் இரண்டு தனியார் ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இலங்கையில் 2 தேவாலயங்கள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு.. பலர் படுகாயம்..!!
190
previous post