முஹர்ரம் மாதத்தில் ஆஷுராவுடைய இரண்டு சுன்னத்தான நோன்பு பிறை 9, 10 ஆகிய இரண்டு தினங்களில் தமிழகத்தில் உள்ள பல இஸ்லாமியர்கள் நோன்பு நோற்றனர்.
அதேபோல் அதிரையிலும் பலர் நோன்பு நோற்றனர்.
இதனையடுத்து , நோன்பாளிகள் நோன்பு திறக்க
முகைதீன் ஜும்மா பள்ளியில் நோன்பு திறப்பதற்க்கு ஏற்ப்பாடு செய்யப்படிருந்தது. அதேபோல் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நேற்று (30/09/17) சனிக்கிழமை 125 நோன்பாளிகளும் ,இன்று (01/10/17) ஞாயிற்றுகிழமை சுமார் 350க்கு மேர்ப்பட்டோரும் கலந்துக் கொண்டு நோன்பு திறந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நோன்பு திறப்பதற்கு நோன்பு கஞ்சி, வடை சமோசா போன்ற உணவுகள் அளிக்கப்பட்டது.