124
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் புதுக்குடி நெசவுத்தெருவில் இன்று வியாழக்கிழமை(25/05/2019) பிற்பகல் குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து குறித்து பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வாகனம் வர சற்று தாமதமானதால் பொதுமக்களே தீயை அணைக்கும் பணியில் களமிறங்கினர். பின்னர் தீயணைப்பு வாகனம் வந்ததும் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
குடும்பத்தகராறு காரணமாக குடிசை வீட்டிற்கு தீ வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தீ மளமளவென பற்றி எரிந்ததால் குடிசை முழுவதும் எரிந்து தீக்கிரையானது.