102
இலங்கையில் கடந்த வாரம் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 300க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். இதனையடுத்து இலங்கை முழுவதும் பாதுகாப்புப்படை வீரர்கள் குவிக்கப்பட்டு, கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், பலியான அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இன்று செவ்வாய்க்கிழமை அமைதி பேரணி நடைபெற்றது.
பட்டுக்கோட்டை பங்கு தந்தை மற்றும் அனைத்து கிறிஸ்தவ சபை குருமார்கள் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் அனைத்து கிறிஸ்தவ மக்களும் கலந்துகொண்டனர்.