மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றியை திமுக பெற்றுள்ளது. நட்சத்திர வேட்பாளாராக தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் களம் இறங்கிய கனிமொழி எதிர்த்து நின்ற தமிழிசையை விட அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இதனை அடுத்து திமுகவின் அனைத்து கிளை அமைப்பின் முக்கிய நிர்வாகிகளும் வெற்றி பெற்ற அனைத்து உறுபினர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ள கனிமொழியை தஞ்சை மாவட்ட திமுகவின் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையின் அமைப்பாளர் பழஞ்சூர் செல்வம் மற்றும் அவரது மகன் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.