Home » சிமெண்ட் இல்லாமல் கட்டப்பட்ட உலகின் முதல் பாலம் ! சந்திசிரிக்கும் நெடுஞ்சாலைத்துறை !

சிமெண்ட் இல்லாமல் கட்டப்பட்ட உலகின் முதல் பாலம் ! சந்திசிரிக்கும் நெடுஞ்சாலைத்துறை !

0 comment

உலக வரலாற்றிலேயே சிமெண்ட் இல்லாமல் பாலம் கட்டும் முதல் தொழில் நுட்பம் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரங்கேற்றப்பட்டுள்ளதை இளைஞர்கள் வீடியோவாக பதிவு செய்து வைரலாக்கி வருகின்றனர்.

புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதிக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் செவலூர் விலக்கு சாலை அருகே கட்டப்பட்டுள்ள புதிய சிறிய பாலத்தின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பாலத்தில் கால் வைக்க பாலத்தின் சிமெணெ்ட் பூச்சு உதிர்ந்து கொட்டியது. கை வைத்து பார்த்த இளைஞர்களுக்கு ஆச்சரயம். வெறும் மணலை மட்டுமே வைத்து பாலம் கட்டி அதில் வெள்ளை அடித்துவிட்டு நெடுஞ்சாலைத் துறையிடம் பணத்தை வாங்கிச் சென்றுள்ளனர்.

மறுபடியும் பாலத்தில் கால் வைத்தால் கொட்டிவிடும் என்பதால் அசையாமல் காலை எடுத்த இளைஞர்கள் தங்கள் விரலால் பாலத்தின் கட்டுமானத்தில் அழுத்திய போது கலவை கொட்டியது. அதை அப்படியே வீடியோவாக பதிவு செய்த இளைஞர்கள்..

தமிழக நெடுஞ்சாலைத்துறை சாதனை…. சிமெண்ட் இல்லாமல் கட்டப்பட்ட உலகின் முதல் பாலக்கட்டை… இடம்: செவலூர் விளக்கு (புதுக்கோட்டை ‍பொன்னமராவதி சாலை) என்ற தலைப்பிட்டு  வீடியோவை சமூக வதைளங்களில் வைரலாக பரவவிட்டுள்ளனர்.

இப்படிதான் அறந்தாங்கி பக்கம் ரூ 1.44 கோடியில் ஒரு சாலை அமைத்து பதாகை வைத்தார்கள் ஒரு மாதத்தில் பல்லைக்காட்டியது அந்த சாலை. அந்த பொறியாளர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இப்போது செவலூர் விலக்கு சாலை பாலம். இந்த பொறியாளர்களுக்கு பரிசுகளே கொடுக்கலாம்.. புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதால்.

Courtesy : நக்கீரன்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter