Home » பொதக்குடி, ஆலத்தூர் அணிகள் வெற்றி!!

பொதக்குடி, ஆலத்தூர் அணிகள் வெற்றி!!

0 comment

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் (AFFA) சார்பாக 16 ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கால்பந்துத் தொடர் போட்டி நேற்று மாலை கிராணி மைதானத்தில் தொடங்கியது.

AFFA தொடரில் தினசரி 2 போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்றைய முதலாவது போட்டியில் Riyalath FC பொதக்குடி – MFC மேலநத்தம் அணிகள் மோதின.

இதில் பொதக்குடி அணி 1 – 0 என்கிற கோல் கணக்கில்
மேலநத்தம் அணியை வீழ்த்தியது.

இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் அதிரை AFFA (Veteran’s) – AFC ஆலத்தூர் அணிகள் மோதின.

இப்போட்டியில் ஆலத்தூர் அணி 3 – 1 என்கிற கோல் கணக்கில் வெற்றி பெற்றாலும்,
அதிரை AFFA அணியின் முன்னால் நட்சத்திர வீரர்கள் நீண்ட வருட இடைவெளிக்குப் பின் இந்த போட்டியில் களமிறங்கி எதிரணியின் ஆட்ட நுணுக்கங்களை அவ்வப்போது சிதறடித்தது ஆறுதலை தருவதாக உள்ளது.

நாளைய தினம் Riyalath FC பொதக்குடி – AFC ஆலத்தூர் அணிகள் மோத உள்ளன.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter