Home » அதிரை SSMG தொடர்: நீயா..நானா.. நடந்தது என்ன??

அதிரை SSMG தொடர்: நீயா..நானா.. நடந்தது என்ன??

by admin
0 comment

அதிரை SSMG நினைவாக 19 ம் ஆண்டு மற்றும் அதிரை இளைஞர்கள் கால்பந்துக் கழகம் சார்பாக 25 ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்துத் தொடர் போட்டி 25 நாட்களாக நடைபெற்று வருகிறது.

இதில் பல்வேறு ஊர்களில் இருந்து தலைசிறந்த அணிகள் பங்கு கொண்டு விளையாடி வருகின்றன.

இன்றைய தினம் நடைபெற்ற காலிறுதி போட்டியில் அதிரை SSMG – கௌதியா 7’s நாகூர் அணிகள் மோதின.

அரையிறுதி போட்டிக்கு செல்லும் முனைப்பில் இரு அணிகளும் உத்வேகத்துடன் களம் கண்டது.

முதலாவது பகுதி நேர ஆட்டத்தில் அதிரை SSMG அணி 2 கோலை அடித்து நாகூர் அணிக்கு அதிர்ச்சி கொடுத்து முன்னிலை வகித்தது.

இருப்பினும் இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில், சற்றும் தளராமல் அதே உத்வேகத்துடன் ஆடிய நாகூர் அணி, அணியின் தலைவர் பக்கர் கொடுத்த பந்தை நாகூரின் நட்சத்திர வீரர் சித்தீக் லாவகமாக தூக்கி அடித்து கோலாக மாற்றியதும் ஆட்டம் விறுவிறுப்பானது.

நடுவருக்கும் வீரர்களுக்கும்மிடையே சில சலசலப்புக்கு மத்தியில் ஆட்டம் முடிவுற 4 நிமிடங்கள் மீதமிருக்கையில் நாகூர் அணி மற்றொரு கோலை அடித்து உள்ளூர் ரசிகர்களையும் பரவசத்தில் ஆழ்த்தியது.

அடுத்தடுத்து இரு அணிகளும் கோல் போட முயற்சி செய்தாலும், ஆட்ட நேரம் முடிவுற்றது.

2 – 2 என்கிற கோல் கணக்கில் சமநிலையில் முடிவுற்ற இவ்வாட்டம் நாளை மறுதினம் (02-07-2019) செவ்வாய்க்கிழமை தொடர உள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter