அதிரை SSMG நினைவாக 19ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் 25ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கலைவாணர் 7s கண்டனூர் அணியினரும் யுனைடெட் ஸ்போர்ட்ஸ் விழுப்புரம் அணியினரும் மோதினர்.
ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணியினரும் சிறப்பாக ஆடின. அதிலும் விழுப்புரம் அணியின் அனைத்து வாய்ப்புகளையும் கண்டனூர் அணியின் கோல் கீப்பர் மணி அருமையாக தடுத்தார்.
இதையடுத்து தாக்குதலை துரிதப்படுத்திய கண்டனூர் அணி அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தியது. ஆட்டநேர இறுதியில் கலைவாணர் 7s கண்டனூர் அணி 4-0 என்ற கோல் கணக்கில் யுனைடெட் ஸ்போர்ட்ஸ் விழுப்புரம் அணியை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
வெற்றி பெற்ற கண்டனூர் அணியினருக்கு முதல் பரிசு ரூ. 30,000மும் SSM குல்முகம்மது அவர்கள் நினைவாக வின்னருக்கான சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த விழுப்புரம் அணியினருக்கு ரூ.25,000மும் கா.மு. முஹம்மது இப்ராஹிம் அவர்கள் நினைவாக ரன்னருக்கான சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது.
முன்னதாக இன்றைய ஆட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் கால்பந்தாட்ட வீரர்கள் கோபாலகிருஷ்ணன், வேலுச்சாமி, ஜமால் மற்றும் காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் அஹமது கபீர் ஆகியோர் பங்கேற்று வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஆட்டத்தை துவக்கி வைத்தனர். மேலும் முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் இப்ராஹீம், M. முஹம்மது சஃரீப், இளைஞர் கால்பந்து கழகத்தினர் பசூல்கான், ஹாஜா, மொய்தீன் மற்றும் பலர் பங்கேற்றனர்.