Home » நீரின்றி அமையாது உலகு ~ அதிரை ரியாஸ்…!

நீரின்றி அமையாது உலகு ~ அதிரை ரியாஸ்…!

by admin
0 comment

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நம் அனைவர்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக. ஆமின்
அனைத்து முஹல்லா சகோதரர்களுக்கு
பொது நலன் கருதி அன்பான வேண்டுகோள்:

“தண்ணீர்”பற்றி இஸ்லாம் என்ன கூறுகின்றது? என்பது பற்றி உலகிற்கு உணர்த்த வேண்டிய அவசியம் முழு முஸ்லிம்களுக்கு உண்டு.

தண்ணீர் பற்றி இஸ்லாம்,
அல்லாஹ் கூறுகின்றான்:
“தண்ணீரிலிருந்தே நாம் தான் உயிரினங்களை(படைத்தோம்) வெளிப்படுத்தினோம்”
அல்குர் ஆன்: 21:30

அல்லாஹ் கூறுகிறான்!
மேலும் அவனே தன்னுடைய கருணைக்கு முன்னால் காற்றை நற்செய்தி- யாக அனுப்புகின்றான். பின்னர், வானிலிருந்து சுத்தமான நீரை வெளியாக் -குகின்றான். பூமியின் உயிரற்ற பகுதிகளுக்கு இதன் மூலம் நாம் உயிரூட்டுவதற்காகவும், மேலும் நம்முடைய படைப்பினங்களில் அனேக கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் தண்ணீர் புகட்டுவதற்காகவும் தான் இந்நிகழ்வுகளை அவர்களிடேயே அடிக்கடி நாம் உண்டு பண்ணுகின்றோம்.அவர்கள் படிப்பினை பெற வேண்டும் என்பதற்காக,!
அல்குர் ஆன்: 2

ஆண்டுக்கு 40 ஆயிரம் டன் கழிவுகளால் நீர் மாசுப்படுகின்றது. மாசுபட்ட தண்ணீரைஅருந்துவதால் உலகம் முழுக்க தினமும் 4 ஆயிரத்திற்கும்மேற்பட்ட குழந்தைகள் இறந்து போவதாகவும்,பல நோய் தாக்குதல் ஏற்படுவதாகவும் ஆய்வுகள்கூறுகின்றன.

மறுபுறம், வறட்சியாலும், நிலத்தடி நீர்உறிஞ்சப்பட்டும், நீர்வள ஆதாரங்கள் பாதிக்கப்பட்டும்வருவதால் எதிர்காலத்தில் உலகம் பாலைவனமாக மாறும்அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் அச்சம்தெரிவித்துள்ளனர்.

தமிழ் நாட்டில் கடந்த ஏழு ஆண்டுகளின் கணக்கின்படி இந்த ஆண்டு கணிசமான அளவு நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. இவை இன்னும் அடுத்த ஆண்டுகளில் மேலும் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.

இதற்கு காரணம் போதுமான அளவு மழை இருந்தும் நீர் நிலைகளில் நீர் தேக்கமின்றி மழை நீர் அதிக அளவு கடலில் கலக்கின்றன.
நீர் நிலைகள் சரிவர தூர்வாரப்படாமல் கொள்ளளவு குறைந்து நீர்ப் பிடிப்புப் பகுதி கணிசமாக குறைந்துள்ளது இதனால் பூமிக்கு உட்ப்புகும் நீரின் அளவு குறைந்து வருகிறது. இவை தொடர்ந்தால் தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம் குறையக்கூடும்.

பருவ நிலை மாற்றங்கள் காரணமாக விவசாய நிலங்கள் நிலத்தடி நீரை நம்ப வேண்டியுள்ளது
நீரின் தேவைப்பற்றி சொல்லிக் கொண்டேப் போகலாம். இன்றய சூல்நிலையில் பல ஊர்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்ப்பட்டிருக்கிறது.. பல ( ஊர், கிராமங்)களில் ஏரிகள், குளங்கள், குட்டைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. பல நகரங்களில் இருந்த இடம் காணாமல் உள்ளது. நாம் அனைவருக்கும் நீர் ஆதாரம் குறித்து முக்கியப்பொறுப்புள்ளது.

நமது ஊரில் பல குளங்கள் முறையக பராமரிப்பு இல்லாமலும் தூர்வாரப் படாமலும் உள்ளது. சகோதரர்கள் அனைவரும் உங்கள் தெருவு(வார்டு) களிலுள்ள குளங்களை தூர் வாருவதற்கு உங்கள் முஹல்லா பஞ்சாயத் நிர்வாகிகளோடு நீர்ஆதாரம் குறித்து ஒவ்வொரு வார்டு பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இன்று, நாம் பல காரியங்களுக்கும் பொது நிகழ்வுகளுக்கும் விளையாட்டுகளுக்கும்அதிக கவணம்( நிதி )செலுத்தி வருகிறோம். என் வீடு, என் குடும்பம் ,என்றில்லாமல், நம் வீடு, நம் குடும்பம், நமது ஊர் என்று நிர்வாகிகளோடு கலந்து இந்த விசயத்தில் நமக்கு நாமே திட்டம் அல்லது அரசு சம்பந்தமான திட்ங்கள் மூலம் முயற்சி செய்ய ஒவ்வொரு சகோதரர்களுக்கும் முக்கிய பொறுப்புண்டு.

நம்மால் முடியாதது எதுவுமில்ல. இன்று இதற்கு முயற்சி செய்தால் நாளை நம் தலைமுறைக்கு பயனளிக்கும் காரியமாகும். சென்ற வருடம் கடற்கரைத் தெரு வெட்டிக்குளம், நிர்வாகிகளின் முயற்சியில் குறிப்பாக கடற்கரைத்தெரு வெளிநாட்டு வாழ் சகோதரர்களின் ஆதரவோடு அந்த குளத்தை தூர்வாரினோம். அது எவ்வளவு பயனளித்தது என்று எல்லோரும் அறிவீர்கள். ஊர் அறியும்.நமதூரில் பல குளங்கள் பராபராமரிப்பு இல்லாமல் இருப்பது எல்லாருக்கும் தெரியும், நம்மூரில் பல அரசியல் (அரசு) பிரமுகர்கள் இருக்கிறார்கள், அரசு அதிகாரிகளோடு நெருங்கிய தொடர்புள்ள வார்டு கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். சிந்தித்துப்பாருங்கள்

நீரின்றி அமையாது உலகு! இது வள்ளுவனின் வாக்கு.

-S.ரியாஸ் அகமது
கடற்கரைத் தெரு 9994972464

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter