திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞரின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அணுசரிக்கப்படுகிறது. இதனால் காலை முதலே தமிழகமெங்கும் திமுகவினர் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூர் திமுக சார்பில் அதன் அலுவலகத்தில் உள்ள கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் பேரூர் அவைத்தலைவர் சாகுல் ஹமீது, திமுக மாவட்ட பிரதிநிதி பகுருதீன், பேரூர் திமுக செயற்குழு உறுப்பினரும், முன்னாள் கவுன்சிலருமான முஹம்மது ஷரீஃப், முன்னாள் இளைஞரணி துணைச் செயலாளர் முல்லை மதி, பேரூர் துணைச் செயலாளர் அன்சர்கான், மாவட்ட பிரதிநிதி இன்பநாதன், பொருளாளர் கோடிமுதலி, நிர்வாகிகள் நாகராஜ், அப்துல் அஜீஸ், பிரின்ஸ் ராவுத்தர், வாப்பு மரைக்காயர், சுப்ரமணியன், முத்துராமன் மற்றும் திமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.