189
காஷ்மீரின் தனி அந்தஸ்த்தை மத்தியில் ஆளும் பாஜக அரசு அதிரடியாக நீக்கியது. இதனை எதிர்த்து தமிழக மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளன.
அதன் பேரில் இன்று அதிராம்பட்டினம் மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பேருந்து நிலையத்தில் நடைப்பெறும் என அறிவிப்பு செய்தனர்.
காவல்த்துறையின் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மாலை 5மணிக்கு பேரணயாக புறப்பட்டு பேருந்து நிலையத்தை அடைந்தன, அவர்களை தடுத்து நிறுத்திய காவல் துறை கைது செய்தனர்.
இதில் மஜகவின் மண்டலம் ஜெய்னுல் ஆபிதீன்,தமுமுகவின் மாநில செயலாளர் அஹமது ஹாஜா உள்ளிட்ட தொண்டர்கள் கைது செய்யப்பட்டு லாவன்யா திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர் .