266
அதிரை வரலாற்றில் மிகப்பெரும் சேதத்தையும், சோகத்தையும் ஏற்படுத்திச் சென்ற கஜா புயலை அதிரையர்கள் யாராலும் மறக்க முடியாது. இந்த கொடூர கஜா புயலால் மடிந்துபோன தென்னை மரங்களை மறு உருவாக்கம் செய்யும் நோக்கோடு ஏற்கனவே மரங்களை நட்டி பாதுகாத்து வந்த ஷம்சுல் இஸ்லாம் சங்க அமைப்பினர் மீண்டும் நல்ல நோக்கோடு செயல்பட்டுவந்த வேளையில் பொருளாதார உதவியையும் அதிரையர்களிடம் நாடினர்.
ஊரின் நலனை கருத்தில் கொண்டும் காலத்தின் அவசியம் கருதியும் சிஸ்வா,சிஸ்யா மூலமாக பொருளாதார உதவியை செய்ய அனைவரையும் ஊக்கப்படுத்தியதால் அதிரையின் பெரும்பாலான ஊர் நல விரும்பிகள் தங்களால் இயன்ற பொருளுதவியை செய்தனர்.
இந்த திட்டத்திற்க்கு ‘SIS பசுமை’ என பெயரிடப்பட்டு5 திட்டங்களாக பிரித்து முதல் திட்டம் அதிரை ஷிஃபா மருத்துவமனை தொடங்கி Cmp லைன் வழியாக சேர்மன் வாடிவரை, முதல் திட்டமாக செக்கடி அவென்யு (Chekkadi Avenue) என்று பெயரிடப்பட்டு இதற்குண்டான அனைத்து வேலைகளும் நடைபெற்று வருகிறது.
இரண்டாம் திட்டமாக ஷம்சுல் இஸ்லாம் அமைப்பினர் அதிரை ஜம்ஜம் ஹோட்டல் முதல், கடைத்தெரு வழியாக மெயின் ரோடு வரை அமைக்கும் திட்டத்திற்க்கு மார்கெட் அவென்யு (Market Avenue) என்று பெயரிட்டு தொடங்க உள்ள நேரத்தில் மூன்று முதல் ஐந்தாம் திட்டம் வரை செயல்பட இருக்கும் தெருவை அதிரையர்களாகிய நீங்களே முடிவு செய்து அந்த திட்டத்திற்க்கு நீங்களே ஒரு பெயரையும் தேர்வு செய்யும் முடிவையும் அதிரையர்கள் கையிலே ஷம்சுல் இஸ்லாம் சங்க அமைப்பினர் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
