Tuesday, December 2, 2025

ஜப்பானில் ஹகிபிஸ் புயல் தாக்குதல்: 4 பேர் பலி; 100 பேர் காயம்.!!

spot_imgspot_imgspot_imgspot_img

ஜப்பானை ஹகிபிஸ் புயல் நேற்று கடுமையாக தாக்கியது. தலைநகர் டோக்கியோவுக்கு தென்மேற்கில் உள்ள இசு தீபகற்பத்தில், உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு புயல் கரையை கடந்தது. இதனால், பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது.

கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய புயலாக இது கருதப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வந்ததால், வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. டோக்கியோ, மிய், ஷிசுவோகா, குன்மா, சிபா உள்பட 7 பிராந்தியங்களில் வசிக்கும் சுமார் 42 லட்சம் பேர் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.

டோக்கியோவில் ஓட்டல்கள், கடைகள், மருந்தகங்கள் மூடப்பட்டு இருந்தன. முன்னெச்சரிக்கையாக, ஜப்பான் முழுவதும் சுமார் 2 ஆயிரம் சர்வதேச, உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 2 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளுக்கு தேவையான மின் சேவை துண்டிக்கப்பட்டது.

இந்த புயல் மணிக்கு 162 கி.மீ. வேகத்தில் பயணிக்கிறது. புயல் தாக்குதலுக்கு 4 பேர் பலியாகி உள்ளனர். 100 பேர் காயமடைந்து உள்ளனர். நாடு முழுவதும் 11 பேரை காணவில்லை என மீட்பு பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் வழங்கிய தகவலில் இருந்து தெரிய வந்துள்ளது.

இதனிடையே, கிழக்கு மற்றும் மத்திய ஜப்பான் பகுதியில் இருந்து வெளியேறும்படி மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு அரசால் வெளியிடப்பட்டது. ஹொன்சு தீவில் இருந்து 60 லட்சம் பேர் வெளியேற அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

எனினும், டோக்கியோ நகரில் உள்ள ஹனேடா விமான நிலையம் மற்றும் ஷிங்கான்சென் புல்லட் ரெயில் சேவைகள் இன்று காலையில் இருந்து மீண்டும் தொடங்கப்பட்டன. ஹகிபிஸ் புயல் இன்று மதியம் வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source:- Dailythanthi

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அதிரையில் இரண்டாவது நாளாக கொட்டித் தீர்க்கும் கோடை மழை!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெளியின் தாக்கம் தீவிரமடைந்து காணப்பட்ட நிலையில், சுட்டெரிக்கும் சூரியனில் இருந்து சிறு விடுதலையாக மாநிலம் முழுவதும்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது. தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...
spot_imgspot_imgspot_imgspot_img