Home » சென்னையில் இருந்து புறப்படும் தீபாவளி சிறப்பு பேருந்துகளின் வழித்தட விவரம் !

சென்னையில் இருந்து புறப்படும் தீபாவளி சிறப்பு பேருந்துகளின் வழித்தட விவரம் !

0 comment

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் நாளை முதல் அக்டோபர் 26 வரை, 24 மணி நேரமும் மாநகர சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை வருகிற 27-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் இருந்து நாளை முதல் வழக்கமான பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 10,940 பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.

இதன்படி 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை தினமும் சென்னையில் இருந்து இயக்கப்படும் தலா 2,225 அரசு பேருந்துகளுடன் கூடுதலாக 3 நாட்களும் 4,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதன்படித்தான் 10,940 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு குறிப்பிட்டு இருந்தது.

சென்னையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளின் விவரம் :

கோயம்பேடு பேருந்து நிலையம் – மயிலாடுதுறை, நாகை, வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்செந்தூர், நாகர்கோவில், திருவனந்தபுரம், விழுப்புரம், பண்ருட்டி, நெய்வேலி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கோவை, ராமநாதபுரம், எர்ணாகுளம் மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்துகள்

மாதவரம் பேருந்து நிலையம் – ஆந்திராவுக்கு செல்லும் அனைத்து பேருந்துகள்

கே.கே. நகர் பேருந்து நிலையம் – ஈ.சி.ஆர் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்

தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் – விக்கிறவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்

பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் – ஆற்காடு, ஆரணி, வேலூர், ஆம்பூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர் செல்லும் பேருந்துகள்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter