79
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டிணத்தை சேர்ந்வர் சபியுல்லா. இவர் சென்னை மன்னடியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்துள்ளார்.
இந்நிலையில் இன்று மாலை சபியுல்லா அவர் தங்கியிருந்த விடுதியில் மர்மமான முறையில் இறந்துகிடந்துள்ளார். உடனே விடுதியில் உள்ளவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை சபியுல்லாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்விற்க்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் சபியுல்லா மர்மமான முறையில் இறந்து கிடந்ததை அடுத்து இவர் கொல்லப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.