83
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிடும் முன் புதிய மாவட்டங்களுக்கான தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு, சுழற்சிமுறை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்ய தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக புதிதாக மனு செய்துள்ளது.
திமுக தாக்கல் செய்துள்ள இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த மனுவால் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் மேலும் காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.