115
பாபர் மஸ்ஜிதை திருப்பிக்கொடு, குற்றவாளிகளை சிறையிலடை என்ற முழக்கத்துடன், அதிராம்பட்டினத்தில் SDPI கட்சி சார்பில் நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று வெள்ளிக்கிழமை(06/12/2019) மாலை நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் மாநில பேச்சாளர் ஆவூர் அன்சாரி மற்றும் SDPI கட்சியின் மாவட்ட, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.
அதிரை தக்வா பள்ளியில் இருந்து துவங்கிய ஆர்ப்பாட்ட பேரணி, பேருந்து நிலையம் அருகே நெருங்கிய போது, ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இதனால் அதிரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.