Home » மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா – ஆதரவாக வாக்களித்த அதிமுக !

மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா – ஆதரவாக வாக்களித்த அதிமுக !

0 comment

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லீம் மதத்தவர் தவிர்த்து ஹிந்து, புத்தம், கிறிஸ்துவம் உள்ளிட்ட 6 மதங்களை சேர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கும் குடியுரிமை திருத்த மசோதாவை பாஜக அரசு அறிமுகம் செய்துள்ளது.

லோக்சபாவில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதா, இன்று ராஜ்யசபாவிலும் நிறைவேறியது. அதில் மசோதாவுக்கு ஆதரவாக 125 எம்.பிக்களும் எதிராக 105 எம்.பிக்களும் வாக்களித்தனர்.

125 உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த மசோதா ஆனது தற்போது மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மசோதாவிற்கு ஆதரவாக பாஜகவின் கூட்டணி கட்சிகளும், அதிமுக போன்ற கட்சிகளும் வாக்களித்தன.

இந்நிலையில் இந்த சட்டம் நிறைவேறியுள்ளது. இரு அவைகளும் நிறைவேறிய இந்த மசோதாவுக்கு, குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியதும் சட்டம் நடைமுறைக்கு வரும்.

தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்றும் இந்த சட்டத்தால் இந்தியாவில் இஸ்லாமியர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் பல்வேறு எதிர்க்கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் பெரும் எதிர்ப்பும், போராட்டமும் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter