Home » அதிரையில் வீட்டின் கண்ணாடியை உடைத்த மர்மநபர்! பொதுமக்கள் அதிர்ச்சி!!

அதிரையில் வீட்டின் கண்ணாடியை உடைத்த மர்மநபர்! பொதுமக்கள் அதிர்ச்சி!!

0 comment

வளர்ந்து வரும் நாகரீகத்திற்கு ஏற்றார்போல் அதிரையின் எல்லையும் விரிவடைந்து வருகிறது. சொந்த ஊரில் சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என எண்ணும் அதிரையர்கள், வெளியூர்களில் தொழில் செய்தாலும் பாரம்பரிய குடிவாழ்ந்த வீடுகளை விற்பதற்கு அல்லது வாடகைக்கு விடாமல் பூட்டி போட்டு விட்டு நடையை கட்டிவிடுகின்றனர். இதுவே விபரீதமாக சில சமயங்களில் மாறிவிடுகிறது.

நீண்டகாலமாக பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிடும் மர்ம கும்பல் இரவு நேரத்தில் அந்த வீடுகளை தங்களின் கோட்டையாக நினைத்து தங்க ஆரம்பித்து விட்டனர்.

இதேபோல் அதிரையில் உள்ள பிரதான தெரு ஒன்றில் நீண்டகாலமாக பூட்டிக்கிடந்த வீட்டின் நிலை தான் இது!

இவ்வாறான சூழல் இனிவர கூடிய காலங்களில் நிகழாமல் இருக்க, உள்ளூரில் இருக்கும் உறவுகாரர்களிடம் வீட்டின் சாவியை கொடுத்து அவ்வபோது வீட்டை கவனத்தில் வைத்துக்கொள்ள சொல்லலாம்.

இது ஒருபுறமிருக்க நேற்றைய தினம் அதிரையில் வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து திருட முயற்சி செய்து இருக்கிறான் மர்ம நபர் ஒருவன். இதனை கண்ட வீட்டு பெண்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.

இதுபோன்ற குற்ற சம்பவங்களை தடுக்க காவல் துறை தனது கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

என்ன செய்ய போகிறது “காவல்”துறை பொறுத்திருந்து பார்ப்போம்…

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter