Tuesday, December 2, 2025

சவுதியில் மெக்கா குறித்து பதிவிட்டு கைதான நபரை மீட்க இந்திய முஸ்லீம்கள் முயற்சி…!

spot_imgspot_imgspot_imgspot_img

மெக்கா குறித்து பேஸ்புக்கில் சர்ச்சை பதிவிட்டதாக சவுதியில் கைதான இந்தியரை மீட்க, கர்நாடகாவைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் முயன்று வருகின்றனர்.

கர்நாடகாவில் உடுப்பி பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ் பங்கேரா. இவர் சவுதி அரேபியவில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஏ.சி மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அவரின் பெயரில் இருக்கும் பேஸ்புக் கணக்கில் இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவை இடித்து ராமர் கோவில் கட்ட வேண்டும் என்றும், சவுதி பட்டத்து இளவரசரை விமர்சித்தும் பதிவு போடப்பட்டிருந்ததாகக் கூறி அவர் அங்குள்ள போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், அவரின் வேலையும் பறிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில், அவர் மன்னிப்பு கேட்கும் வீடியோவும் வெளியானது. மங்களூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் மத வன்முறையை தூண்டும் விதமாக அவர் பதிவு போட்டதாகவும், அதனாலே மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார் என்று ஹரிஷ் பங்கேராவின் மனைவி உள்ளிட்ட உறவினர்கள் கூறுகின்றனர்.

மேலும், மெக்கா, சவுதி மன்னர் பற்றிய பதிவுகளை ஹரிஷின் புகைப்படத்தை பயன்படுத்தி போலியாக பேஸ்புக் கணக்கு தொடங்கி யாரோ பதிவிட்டுள்ளதாகவும், தவறாக எனது கணவரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் ஹரிஷின் மனைவி கூறுகிறார்.

இது தொடர்பாக உடுப்பி சைபர் கிரைம் போலீசிடமும் அவர் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து, அந்த பேஸ்புக் கணக்கு நீக்கப்பட்டது. எனினும், மெக்கா பற்றிய பதிவுகளின் ஸ்க்ரீன் ஷாட்கள் வைரலாக பரவி வருகின்றன.

ஹரீஷ் கைதான சம்பவம் வெளியுறவுத் துறைக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் தூதரக ரீதியாக இதுதொடர்பான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர, உடுப்பியில் உள்ள இஸ்லாமியர்கள் சிலர் சவுதியில் உள்ள தங்களது நண்பர்களை வைத்து ஹரிஷை சிறையில் இருந்து விடுவிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : AFFA அணியின் வேகத்தில்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கால்பந்து தொடர்களில் தலைசிறந்து விளங்கும்...

தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : ஆலத்தூரை சாய்த்து, வெற்றிக்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 20.06.2025 வெள்ளிக்கிழமை AFWA வின் மைதான திறப்பு...

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...
spot_imgspot_imgspot_imgspot_img