அதிராம்பட்டினம் மனித நேய ஜனநாயக கட்சியின் தொழிற்சங்க கொடியேற்று நிகழ்ச்சி சேதுசாலையில் நடைபெற்றது.
இந்த கொடியேற்று நிகழ்ச்சியில் நாகை சட்ட மன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரி கலந்து கொண்டு கொடியேற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், NRC,CAA,NPR ஆகிய நாசகார சட்டங்களுக்கு மக்கள் ஒத்துழைப்பை நல்க கூடாது என்றும், தமிழகரசு வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த அனுமதிக்க முடியாது என தெரிவித்தார்.
முன்னதாக திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர், இந்த நாசகார சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல எனவும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் சொன்னது போல ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் எதிரான சட்டமாகும் என்றார்.
மேலும் பேசிய அவர் மத மாட்சரியங்களை கடந்து எல்லோரும் ஓர் அணியில் இணைந்து இந்த நாசகார சட்டத்தை எதிர்க்க வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் அதிரை ஏரிபுறக்கரை ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிரை அமீன் நடந்து முடிந்த தேர்தலில் தமக்கு ஆதரவளித்தமைக்கு நன்றி தெரிவித்தார்.


