நாடு முழுவதும் குடியுரிமை சட்டம் திருத்த மசோதாவை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் மாணவர்கள் அமைப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து NRC,CAA,NRP எதிராக அடுத்த கட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி ஈடுப்பட்டுவருகிறது. CAA,NRC,NRPக்கு எதிராக நாடு முழுவதும் ஆவணங்களை காண்பிக்க மாட்டோம் எனும் முழுக்கத்தோடு வீடு வீடாக சென்று எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் CAA,NRC,NRPக்கு எதிராக துண்டு சீட் கொடுத்து கடைவீதியில் சென்றும் வீடு வீடாக சென்றும் ஆவணங்களை காண்பிக்க மாட்டோம் எனும் முழுக்கத்தோடு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.


