Home » மனோராவின் அழகை காக்க சமூக ஆர்வலர்கள் முயற்சி!

மனோராவின் அழகை காக்க சமூக ஆர்வலர்கள் முயற்சி!

by
0 comment

மல்லிபட்டினம் அருகே உள்ள சரபேந்திரன்ராஜன்பட்டினத்தில் புராதன சின்னமான மனோரா உள்ளது.

சுற்று தளமாக விளங்கிய இம்மனோரா தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளன.

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் குளோபல் வில்லேஜ் என பெயரிடப்பட்டு புனரமைப்பு செய்து பாதுகாத்து வந்தனர்.

காலப்போக்கில் போதிய பராமரிப்பு இன்றி கட்டிடங்கள் சிதிலமடைந்து சமூக விரோதிகளின் கூடாரமாக விளங்கி வருகிறது.

அரசால் தடைசெய்யப்பட்ட போதை வஸ்த்துக்கள் போன்றவற்றை உட்கொண்டு அப்பகுதியில் சமூக விரோத செயலில் சிலர் ஈடுபடுவதால் அப்பகுதிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை முற்றிலும் இல்லாமல் போய்விட்டன.

இந்நிலையில் விதைகள் என்ற தன்னார்வ அமைப்பு இதனை சுத்தம்.செய்து மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு அமைத்திட திட்டமிடு அதற்க்கான பூர்வாங்க பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

இதற்காக சமூக ஆர்வலர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக அவ்வமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் எம்மிடம் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter