Home » எத்தனை போராட்டங்கள் நடந்தாலும் CAA திரும்ப பெறப்படாது – அமித் ஷா !

எத்தனை போராட்டங்கள் நடந்தாலும் CAA திரும்ப பெறப்படாது – அமித் ஷா !

0 comment

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான மசோதா கடந்த ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜனாதிபதி ஒப்புதலோடு சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படுவதாகக் கடந்த 10-ம் தேதி அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டது.

இதை எதிர்த்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகப் போராட்டங்கள் நடந்துவருகின்றன. சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய கேரள அரசு, உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருக்கிறது. இந்தநிலையில், சட்டம் குறித்து விளக்கமளிக்கும் வகையில் தேசிய அளவில் பல்வேறு ஆதரவுப் பேரணிகளையும் பொதுக்கூட்டங்களையும் பா.ஜ.க நடத்தி வருகிறது.

உத்தரப்பிரதேசத் தலைநகர் லக்னோவிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. லக்னோவின் கிளாக் டவர் பகுதியில் பெண்கள் முன்னெடுத்துள்ள காலவரையற்ற போராட்டம் 5வது நாளை எட்டியிருக்கிறது. போராட்டம் தொடர்பாக 16 பெண்கள், நூறுக்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாதவர்கள், கவிஞர் முனாவர் ரானாவின் இரண்டு மகள்கள் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில், லக்னோவில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜ.க லக்னோவில் பொதுக்கூட்டம் மற்றும் பேரணியை நடத்தியது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு பேசினார். இந்தப் பேரணிக்கு முன்பாக போலீஸார் பெண்கள் போராட்டம் நடத்திய பகுதிவரை கொடி அணிவகுப்பை மேற்கொண்டனர். மேலும், போராட்டத்தை முடித்துக்கொள்ளும்படி அவர்களிடம் போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தை பலன் கொடுக்கவில்லை. அதேபோல், லக்னோவின் கோமதி நகர் பகுதியில் உள்ள உஜாரியானில் 15-க்கும் மேற்பட்ட பெண்கள் சிஏஏ-வுக்கு எதிரான பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter