குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை வண்ணாரப்பேட்டையில் போராடிய இஸ்லாமியர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது. இந்த தடியடி சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இந்த தடியடி சம்பவத்தை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தைத் திரும்பப்பெற கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் போலீஸ் தடியடி நடத்திய வண்ணாரப்பேட்டையில் தடையையும் மீறி தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. தெற்கு டெல்லியில் உள்ள ஷாஹீன் பாக்கில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தை போல் இந்த போராட்டமும் நடைபெற்று வருகிறது.
குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும்வரை போராட்டத்தை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையின் ஷாஹீன் பாக்காக வண்ணாரப்பேட்டை உருவெடுத்து வருகிறது.



