Wednesday, October 9, 2024

துபாயில் கீழத்தெரு அமீரக அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு !(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை கீழத்தெரு அமீரக அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு துபாயில்(தேரா பூர்ஜ்முரார்) நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு அமீரக முன்னாள் நிர்வாகி பி.ஓ. பக்கிர் முஹம்மது தலைமை வகித்தார். அமீரக கீழத்தெரு நிர்வாகிகள், முஹல்லாவாசிகள் முன்னிலை வகித்தனர்.

பின்னர் நிதிநிலை அறிக்கையை அமீரக முன்னாள் பொருளாளர் மர்ஜூக் சமர்ப்பித்தார். இதையடுத்து, கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2020 மார்ச் வரை கீழத்தெரு அமீரக அமைப்பு ஆற்றிய சேவைகள், செயல்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் பற்றி எடுத்துரைக்கப்பட்டன.

மேலும் சிறப்பாக பணியாற்றிய அமீரக அமைப்பினர், கீழத்தெரு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் கீழத்தெரு அமீரக அமைப்பின் தலைவராக T. ஹைதர் அலி, துணை தலைவராக S. முகமது ரியாஸ்கான், செயலாளராக S. ஹபீப் ரஹ்மான், துணைச் செயலாளராக M. முகைதீன் அப்துல் காதர், பொருளாளராக S. அஹமது ஜவாஹிர், துணை பொருளாளராக K. அல் கலிஃபா ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில் அமீரக வாழ் கீழத்தெரு முஹல்லாவாசிகள் பலர் கலந்துகொண்டனர்.

இறுதியாக கீழத்தெரு அமீரக அமைப்பின் முன்னாள் செயலாளர் K. ஷேக் தாவூது நன்றி தெரிவித்து கூட்டத்தை முடித்து வைத்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மீண்டும் சென்னை – ஜித்தா விமானப் பயண சேவை தொடங்கியது சவுதியா...

கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையிலிருந்து ஜித்தா பயணிக்க நேரடி விமான சேவை இல்லாமல், குறிப்பாக புனித உம்ரா செல்வோருக்கு மிகவும் சிரமமாக இருந்து...

ஜப்பானில் இஃப்தார் நிகழ்ச்சி..! திரளான அதிரையர்கள் பங்கேற்பு…!!

புனிதமிகு ரமலான் மாதத்தில் ஜப்பான் வாழ் அதிரை குடும்பங்கள் உட்பட சுமார் 120க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இஃப்தார் சந்திப்பு நிகழ்வு நேற்று(07-04-24) ஞாயிற்றுக்கிழமை...

ஜப்பானில் அதிரையர்களின் இஃப்தார் நிகழ்ச்சி! 100க்கு மேற்பட்டோர் பங்கேற்பு!

ஜப்பான் வாழ் அதிரை குடும்பங்கள் உட்பட சுமார் 120 க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இஃப்தார் சந்திப்பு நிகழ்வு நேற்று 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை ...
spot_imgspot_imgspot_imgspot_img