Home » கொரோனாவை விட கொடூரமானது NPR – திட்டமிட்டபடி சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் : ததஜ அறிவிப்பு !

கொரோனாவை விட கொடூரமானது NPR – திட்டமிட்டபடி சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் : ததஜ அறிவிப்பு !

0 comment

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பினால் CAA NRC NPR க்கு எதிரான மக்கள் போராட்டங்கள் கைவிடப்படுவதாக சில ஊடகங்களில் செய்தி பரவுகின்றது.

NPR-க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரி மார்ச் 18 அன்று நாம் அறித்திருந்த சிறைநிரப்பு போராட்டம் அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.

இந்தியாவில் கொரானாவில் உயிரிழந்தோர் 2 பேர் மட்டுமே.

ஆனால் CAA NRC NPR ஆகிய கருப்பு சட்டங்களால் 80 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இச்சட்டம் தமிழகத்தில் நடைமுறையாகும் போது கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட உள்ளனர்.

கொரோனாவை விட கொடியதாக உள்ள NPR சட்டத்தை திரும்ப பெறக்கோரி ஏற்கனவே அறிவித்தபடி வருகிற 18ம்தேதி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும்.

  • தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter