Home » ஊரடங்கை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப பெற்றுக்கொள்வது எப்படி ?

ஊரடங்கை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப பெற்றுக்கொள்வது எப்படி ?

0 comment

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித்திரியும் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப பெறலாம் என தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபி ஜே.கே. திரிபாதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறியிருப்பதாவது :

24.03.2020 முதல் ஊரடங்கு நடைமுறையின் பொழுது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அதன் உரிமையாளர்கள் திரும்ப பெற்றுக்கொள்ளலாம். வாகன உரிமையாளர்கள் தினசரி காலை 7.00 மணி முதல் பகல் 12.30 மணி வரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 30 நிமிடத்திற்கு ஒருமுறை 10 நபர்களுக்கு என்ற முறை கடைபிடிக்கப்பட்டு வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும். தேவைப்படின் அதிகப்படியாக 1.00 மணி வரை வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும். இத்தருணத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அந்தந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வழங்கப்படும். 24.03.2020 அன்று முதல் FIR பதிவு செய்யப்பட்ட வரிசைபடி வாகன உரிமையாளர்களுக்கு எந்த இடத்திற்கு வந்து வாகனங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற தகவல் முன்னதாகவே அனுப்பப்படும். தகவல் பெற்றவர்கள் நேரில் வந்தவுடன் ஆவணங்களை சரிபார்க்கப்பட்டு வாகங்கள் அவர்கள் வசம் ஒப்படைக்கப்படும். வாக உரிமையாளர்கள் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள் :

■ வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கான FIR நகல்

வாகன உரிமையாளரின் டிரைவிங் லைசென்ஸ் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ்

■ வாகனத்தின் RC புக் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ்

இவ்வாறு தமிழக டிஜிபி ஜே.கே. திரிபாதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter