97
கொரோனா ஊரடங்கால் வழக்கமாக காலை முதல் நண்பகல் வரை அனைத்து அத்தியாவசிய கடைகள் இயங்கும் என முன்னரே அறிவித்திருக்கிறது அரசு .
ஆனால் ஞாயிறு தோறும் முழு ஊரடங்கை அமல் படுத்த காவல் துறையினருக்கு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்கள்.
இதனிடையே ரமலான் மாதம் குறுக்கிடவே நாள் கிழமைகள் தெரியாமல் மக்கள் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வழக்கமாக ஊரடங்கை போல் காலையில் சகருக்கான உணவு பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்று காத்திருந்த நிலையில், இன்று ஞாயிறு முழு ஊரடங்கால் பொருட்கள் வாங்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க நோன்பு திறப்பதற்கான பதார்த்தங்கள் கிடைக்குமா என்ற கவலையும் இல்லத்தரசிகளை ஆட்படுத்தாமல் இல்லை .