Home » தஞ்சை மாவட்ட மீனவ சங்க காலவரையற்ற வேலைநிறுத்தம் தற்காலிக நிறுத்தம்!!!!

தஞ்சை மாவட்ட மீனவ சங்க காலவரையற்ற வேலைநிறுத்தம் தற்காலிக நிறுத்தம்!!!!

by admin
0 comment

தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் 3.11.2017 காலை 11 மணியளவில் மல்லிப்பட்டிணம் மீனவசங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்கதலைவர் A.தாஜுதீன், மாவட்ட தலைவர் ஆ.இராசமாணிக்கம்,மாவட்ட செயலாளர் ஆ.வடுகநாதன்,கள்ளிவயல் தோட்ட சங்க பொருளாளர் அ.இப்றாகிம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

 

தீர்மானம்:
கடந்த 29.10.2017 அன்று நடைபெற்ற மீனவ சங்க கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 30.10.2017 அன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்ததில் ஈடுபட்டிருந்தோம்.அதனையடைத்து மீன்துறை இணை இயக்குனர் நாகப்பட்டினம்,மற்றும் உதவி இயக்குனர் (பொறுப்பு) தஞ்சாவூர் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் கோரிக்கை அரசுக்கு பரிந்துரைக்கப்படுவதாக கூறியதை அடுத்து
வேலைநிறுத்தம் தற்காலிகமாக நிறுத்திவைப்பது என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.நாளை முதல் வழக்கம்போல் தொழிலுக்கு செல்வது என முடிவு செய்யப்பட்டது.

இப்படிக்கு
தஞ்சை மீனவர் சங்கம்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter