Home » அதிரை சிறுவனின் அசத்தல் முயற்சி !(வீடியோ)

அதிரை சிறுவனின் அசத்தல் முயற்சி !(வீடியோ)

0 comment

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் மக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். வீடுகளிலேயே முடங்கி இருப்பதால், பலர் தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் வீட்டிலேயே வெஜ் சாண்ட்விச் செய்து அதிரை சிறுவன் ஒருவர் அசத்தியுள்ளார்.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் முக்சித் அஹமது. 13 வயதான இவர் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருப்பதால் புதுவித முயற்சியில் இறங்கியுள்ளார் சிறுவன் முக்சித் அஹமது. அதன்படி தானே வெஜ் சீஸ் சாண்ட்விச் செய்து, அதனை செய்வது எப்படி ? என அதன் செய்முறைகளை வீடியோவில் விளக்கியுள்ளார்.

மேலும் யூ ட்யூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ள முக்சித் அஹமது, அதில் இன்னும் பல உணவு வகைகளின் செயல்முறைகளை பதிவேற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு காலத்தில் அதிரை சிறுவன் முக்சித் அஹமதுவின் பயனுடைய இந்த முயற்சி, பாராட்டுக்குரியது!

வீடியோ :

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter