அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி ஒன்று அறுந்து விழும் நிலையில் இருந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், அதிரை எக்ஸ்பிரஸ் தெருவாரியான வாட்ஸ்அப் க்ரூப்பில் தகவல் அளித்தனர். இதனையடுத்து அதிரை மின்வாரியத்தின் தரைவழி தொலைபேசி எண் செயல்பாட்டில் இல்லாததால் 1912 என்ற மின்வாரிய உதவி எண்ணை தொடர்பு கொண்டு அதிரை எக்ஸ்பிரஸ் ஃபாய்ஸ் புகார் அளித்தார்.


இதற்கிடையே அப்பகுதியில் உள்ள தன்னார்வலர்களும், அதிரை மின்சார வாரிய அதிகாரிகளை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளளனர். இதனையடுத்து விரைந்து வந்த அதிரை மின்வாரிய ஊழியர், அறுந்து தொங்கிய நிலையிலிருந்த மின்கம்பியை சரி செய்தார்.
அறுந்து தொங்கிய மின் கம்பியை கண்டதும் ஆக்கப்பூர்வமான முயற்சியை மேற்கொண்ட ஆஸ்பத்திரி தெரு தன்னார்வலர்களுக்கு அதிரை எக்ஸ்பிரஸ் சார்பாக பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம்.