146
அதிராம்பட்டினம் 33KV துணை மின் நிலையத்தில் உயரழுத்த மின் பாதையில் அவசர பராமரிப்பு செய்ய உள்ளதால் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அதிராம்பட்டினம் மின் பகிர்மான வட்டத்தில் மின் விநியோகம் இருக்காது.
இதேபோல் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறப்படும் பின் வரும் கிராமங்களான மழவேனிற்காடு, மகிழங்கோட்டை, ராஜாமடம், ஏரிபுறக்கரை, புதுக்கோட்டை உள்ளூர், கருங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த மின் தடை இருக்கும் என அதிராம்பட்டினம் உதவி மின் பொறியாளர் தெரிவித்து உள்ளார்.
எனவே மின்சார்ந்த அவசர பணிகளை முன்கூட்டியே செய்து பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என உதவி மின் பொறியாளர் கேட்டுகொண்டுள்ளார்.