83
தஞ்சாவூர் மாவட்டம்;பட்டுக்கோட்டை, அரசு மருத்துவமனையில் மாவட்ட துணை ஆட்சியர் மருத்துவ மனைக்கு நேரில் சென்று அனைத்து வார்டுகள் சுத்தமாக உள்ளதா நோயாளிகளுக்கு சரியான முறையில் சிகிச்சை செய்யப்படுகின்றதா என்று ஆய்வு செய்தார்.
அப்போது டாக்டர் நீயூட்டன் அவர்களிடம் இதுகுறித்து கேட்ட போது நாள் ஒன்றுக்கு இப்போது ஆயிரம் நோயாளிகள் வருகிறார்கள் எனவும் ஊரடங்கு காரணமாக குறைவாக இருக்கிறது எனவும் மற்ற நாட்களில் நாள் ஒன்றுக்கு இரண்டாயிரம் வரை வெளி நோயாளிகள் வருவார்கள் எனவும் தெரிவித்தார்.