அதிரை பைத்துல்மாலில் பென்ஷன் பெறும் 238 ஆதரவற்ற, கணவனை இழந்த பெண்களுக்கு பெயர் சொல்ல விரும்பாத நபர் ஒருவரின் மூலம் புடவை ஒன்றும், ஜாக்கேட் துணி ஒன்றும் வழங்கும் நிகழ்ச்சி அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் அதிரை பைத்துல்மால் தலைவர் S.பர்கத், செயலாளர் S.A.அப்துல் ஹமீது, பொருளாளர் S.M.முகமது முகைதீன் ஆகியோருடன் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு பென்ஷன் பெறும் 238 ஆதரவற்ற, கணவனை இழந்த பெண்களுக்கு புடவை ஒன்றும் ஜாக்கேட் துணியும் வழங்கினார்கள்.