சென்னை. மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் J.S.ரிபாயி அவர்கள் கடந்த வாரம் மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்தார்.அதைத் தொடர்ந்து மமகவின் துணைப் பொதுச்செயலாளர் மண்டலம் S.M.ஜைனுல்லாபுதீன், இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி., MLA முன்னிலையில் மஜகவில் இணைத்தார்.தலைவர்களின் இணைப்பு நிகழ்ச்சிகள் தொடரும் நிலையில் அவர்களின் ஆதரவு தொண்டர்கள் இணையும் நிகழ்ச்சி அடுத்த மாதம் டிசம்பரில் தாம்பரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற விருக்கிறது.இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, தலைமை ஒருகிணைப்பாளர் மெளலா நாசர், இணைப்பொதுச் செயலாளர் மைதீன் உலவி, மாநில செயலாளர் தைமிய்யா, மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனிஸ், கோவை பஷீர், ஷமீம் அகமது, வசீம் அக்ரம், பொறியாளர் சைபுல்லாஹ், பல்லாவரம் ஷபி, மற்றும் J.சீனி முகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்
மமகதுணை பொதுச்செயலாளர் மஜகவில்இணைந்தார்..!
93