Home » மல்லிப்பட்டிணம் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிக்கரம்..

மல்லிப்பட்டிணம் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிக்கரம்..

by admin
0 comment

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மல்லிப்பட்டினம் அருகே செம்பருத்தி நகரில்  நேற்று(ஜூன் 4) தீ விபத்து ஏற்பட்டு 5 குடிசைகள் தீக்கிரையானது.

தகவலறிந்து சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்து மாணிக்கம் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.


இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், பட்டுக்கோட்டை தாசில்தார் அருள்பிரகாசம், வருவாய் ஆய்வாளர் வீரமணி, கிராம நிர்வாக அலுவலர் தங்கமுத்து, மல்லிப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா ஜின்னா,ஒன்றிய குழு உறுப்பினர் மீனவ ராஜன், நாடியம் ஒன்றிய குழு உறுப்பினர் செந்தில்நாதன், மரக்காவலசை ஒன்றிய குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, காவல் ஆய்வாளர் அண்ணாதுரை, தலைமை காவலர் வீரமணி அவர்கள் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஹபீபு முஹம்மது மற்றும் சின்னையன் ஆகியோர் கலந்துகொண்டு பாதிக்கப்பட்டு வீடு இழந்து தவித்துக் கொண்டிருந்த நாகேஸ்வரி முத்தையன் லதா பாண்டி ராஜா ராம் லட்சுமணன் அங்குசாமி பன்னீர் நல்லம்மாள் அங்குசாமி ஆகியோருக்கு உடனடி நிவாரணப் பொருட்களை வருவாய் வட்டாட்சியர்  ஒன்றிய பெருந்தலைவர்  உடனடியாக வழங்கி விபத்து குறித்து விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக குடிசை அமைத்துத் தர அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter