100
கொரோனா எதிரொலியாக மக்கள் நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக திருச்சி காந்தி மார்க்கெட், பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது.
தற்போது தமிழகத்தில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்து கடைகளும் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. இதனால் பழையபடி காந்தி சந்தை இயங்க வியாபாரிகள் கோரிக்கை வைத்து வேலை நிறுத்த போராட்டம் அறிவித்திருந்தனர். இன்று வியாபாரிகள் மற்றும் திருச்சி மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற ஜூன் மாதம் 30-ம் தேதிக்கு பிறகு மொத்த காற்கறி வியாபாரம் காந்தி சந்தையில் இயங்க முடிவு செய்யப்படும் என திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்