18/6/2020 அன்று இரவு 9.30 மணி அளவில் அக்வா&பைத்துல்மாலின் 11ஆவது கூட்டம் zoom நேர்காணல் வாயிலாக கராஅத்துடன் துவங்கி சிறப்பாக நடந்து முடிந்தது. அதுபோது கடந்த ரமலான் மாதத்தில் (Ramalan Kit) சிறப்பு நன்கொடை, ஜகாத் & பித்ரா வழங்கிய நல்லுள்ளம்கொண்டோர்க்கு நன்றி பாராட்டி மேலும் கீழ் காணும் அம்சங்கள் பற்றி ஆலோசித்து பரிந்துரை செய்யப்பட்டது:-
1. தற்போதைய இக்கட்டான லாக்டவுன் காரணமாக நம் ஊரிலிருந்து வருபவர்களுக்கு 14 நாட்கள் விடுதிகளில் தங்கி தனிமைப்படுத்தி கொள்வதற்கு உரிய தொகை செலுத்த முடியாதவர்களுக்கு அக்வாப் அங்கத்தினர்கள் மூலமாக கட்டணத்தை செலுத்தி இயன்றவரை உதவிசெய்வது.
- ஹோட்டல் அல்லாது அக்காமடேஷனில் தனிமைப்படுத்தி கொள்வதாக இருந்தால் நமது AQWAB உறுப்பினர் இல்லத்தில் தற்காலிமாக ஒருசிலர் தங்க வைக்கப்பட ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
- குர்பானி கொடுக்கும் விகிதாச்சாரம்பற்றி எடுத்துச்செல்லப்பட்டது இதுபற்றி அடுத்தகூட்டத்தில் பகிர்ந்து கொள்ள ஒத்துக்கொள்ளப்பட்டது. துஆவுடன் zoom மீட்டிங் இனிதே நிறைவுற்றது.
- இந்த அசாதார சூழ்நிலை மாற்றம் வரை ஜூம் மீட்டிங் தொடரும்
அதிரை zoom நேர்காணல் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது
இப்படிக்கு
AQWAB COMMITTEE QATAR